LOADING

Type to search

சினிமா

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் 3 நடிகைகள்?

Share

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். ‘சர்தார் 2’  திரைப்படத்தின் பணிகள் கடந்த 12ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.