நம்மள வாழவும் விடமாட்டான், வளரவும் விடமாட்டான் – `ஜமா’ பட முன்னோட்டம்
Share
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. படத்தின் முன்னோட்டம் தெருக்கூத்து வடிவிலே காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தில் பெண் வேடம் அணியும் கதாநாயகன், அவர் அந்த ஜமாவின் முதலாளி பெண்ணை காதலிக்கிறார். கதாநாயகனுக்கு என சொந்த ஜமா வைக்க வேண்டும் என்பதே கனவு. பிறகு என்ன நடந்தது என்பது போன்ற காட்சிகள் முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ளன. படத்தின் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.