LOADING

Type to search

உலக அரசியல்

வெனிசுலா அதிபரின் சவால் – எலான் மஸ்க்

Share

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார். இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, `சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்’ என்றார்.