LOADING

Type to search

சினிமா

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன்

Share

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். தற்பொழுது படத்தின் புதிய பதிவேற்றம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் தங்கலான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.