LOADING

Type to search

உலக அரசியல்

ஷேக் ஹசீனாவின் கடப்பிதழை அமெரிக்கா ரத்து செய்தது

Share

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார். லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார். ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது. ஆனாலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் கடப்பிதழை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.