LOADING

Type to search

சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் பின்னணி பணிகளில் சாய் பல்லவி!

Share

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் பின்னணி பணிகளில் ஈடுபட்டுளள நடிகை சாய் பல்லவியின் புகைப்பங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’.  இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அமரன் படத்தின் பின்னணி பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.