LOADING

Type to search

இந்திய அரசியல்

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு!

Share

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். 

   கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கேரளா வந்தார். டில்லியில் இருந்து தனி விமானத்தில் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வயநாடு பகுதியில் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என அப்போது அவர் உறுதி அளித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியொர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.