70-வது தேசிய விருது: சிறந்த தமிழ் படம் பொன்னியின் செல்வன்-1
Share
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலி அமைப்பு – பொன்னியின் செல்வன் 1
சிறந்த ஒளிப்பதிவு – பொன்னியின் செல்வன் 1
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகளை ‘பொன்னியின் செல்வன் 1’ அள்ளியுள்ளது.