LOADING

Type to search

உலக அரசியல்

கமலா ஹாரிஸை தேர்வு சரியான முடிவு – பில் கிளிண்டன் பாராட்டு

Share

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான் என முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்தார். ஆம், அவரால் முடியும்; கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்; அமெரிக்காவில், நவ. 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான். 2024ம் ஆண்டில் தெளிவான தேர்வு கிடைத்துள்ளது என தோன்றுகிறது. அதிபராக டொனால்டு டிரம்ப் இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தினார். அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்க கமலா ஹாரிஸ் தன்னை அர்பணித்தார். எதிரிகளை ஜனநாயக கட்சியினர் குறைத்து மதிப்பிட வேண்டாம். கமலா ஹாரிசுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் ஓட்டளித்தால், மக்களின் கனவுகளை நிறைவேற்ற பணியாற்றுவார். எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும். துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.