LOADING

Type to search

சினிமா

ஜமா திரைப்படம் ஓடிடியில் வெளியீடு

Share

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’.  இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த ‘லேர்ண் டீச் புரொடஷன்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் பெண் வேடமிடும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். ‘ஜமா’ திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.