LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- ஆதிபராசக்தி குருமன்றத்தினால் கௌரவிக்கப்பெற்ற ஈழத்து ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி

Share

அணமையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’சர்வதேச சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தனது கௌரவத்தைப் பெறுவதற்காக எமது தாயகத்தின் முள்ளியவளைக் கிராமத்திலிருந்து கனடாவிற்கு வந்திருக்கும் ஈழத்து தமிழ் பேசும் ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி – கனடா- ஆதிபராசக்தி குருமன்றத்தினால் கௌரவிக்கப்பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 18ம்திகதி இந்த வைபவம் இடம்பெற்றது.

கனடா- ஆதிபராசக்தி குருமன்றத்தின் தலைவி ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு வைபவத்தில்

ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி கனடா- அவர்கள் பற்றிய அறிமுகத்தை ‘சக்தி’யோகநாதன் அவர்கள் நிகழ்த்தினார்

அங்கு உரையாற்றிய ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி அவர்கள் ” எனது கனடா வருகையின் போது பல இடங்களில் கௌரவிக்கப்பட்டுள்ளேன். அனைத்து அமைப்புக்களும் தனி அன்பர்களும் என்னையும் எனது சாதனைகளையும் மதித்து கௌரவிப்பதை கண்டு வியந்து போயுள்ளேன். கனடாவில் உள்ள தமிழ் மக்கள் தாயகத்தை விட்டு நீங்கி வந்தாலும் தாயக மக்களையும் அங்குள்ள ஆலயங்களையும் தாங்கள் கல்வி கற்ற பாடசாலைகளையும் மறந்து விடாமல் தொடர்ச்சியாக தங்கள் ஆதரவைத் தந்த வண்ணம் உள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்” என்றார்

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

Kanshaanthan- Local Journalism Reporter – 1