LOADING

Type to search

இந்திய அரசியல்

இந்தியா பணக்காரர்கள் பட்டியல் – அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

Share

2024ம் ஆண்டின் ஹுரன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் குறித்து ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கவுதம் அதானி முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன்படி, கவுதம் அதானி ரூ.11.61 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து, முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்துக்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். 3ம் இடத்தை ரூ.3.14 லட்சம் கோடியுடன் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் பிடித்துள்ளார். தொடர்ந்து, சைரஸ் பூனாவாலா (ரூ.2.89 லட்சம் கோடி), திலிப் சங்க்வி (2.49 லட்சம் கோடி) ஆகியோர் 4 மற்றும் 5ம் இடங்களை பிடித்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 220 அதிகம் ஆகும். இவர்களின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது. முதல்முறையாக இந்தி நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் நுழைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.