LOADING

Type to search

சினிமா

தங்கலான் படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது

Share

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதோடு இந்த படம் இன்று முதல் இந்தி மொழியிலும் தங்கலான் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.