LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக வெற்றி கழக மாநாடு 23-ந் தேதி நடைபெறும் – புஸ்சி ஆனந்த்

Share

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், அவசர ஊர்தி வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி காவல்துறையால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.