LOADING

Type to search

சினிமா

நகுலின் “வாஸ்கோடகாமா” திரைப்படம் ஓடிடியில் வெளியீடு

Share

நடிகர் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் மும்மரமாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக வெளியீடு ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் வெளியீடு தேதி கடந்த மாதம் வெளியானது. அதன்படி ‘வாஸ்கோடகாமா’ படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் வாஸ்கோடகாமா படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்ற “மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” போன்ற வசனங்கள் கவனம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.