LOADING

Type to search

சினிமா

பாலியல் புகார் உறுதியானால் `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – தென்னிந்திய நடிகா் சங்கம் தீர்மானம்!

Share

பாலியல் புகார்களில் குற்றம் புரிந்தவா்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவா்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து திரைத்துறையிலும் இது பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது.

இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் பெண் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திரைத்துறையில் உள்ளவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியானால் திரைத் துறையில் அவர்கள் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சம்மந்தப்பட்ட நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு உறுதியானால் அவர்களுக்கு திரைத் துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதித்து தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.