பாகிஸ்தானின் காஷ்மீர்வாசிகள் இந்தியாவுக்கு வரலாமென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
Share
ஜம்மு – காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் 18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தலும், தொடர்ந்து வரும் 25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடும் நிலையில், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ராம்பான் மாவட்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, கடந்த 2019 ம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு, அங்கு பாதுகாப்பு மேம்பட்டுள்ளதால், இளைஞர்கள் தற்போது துப்பாக்கிகளுக்கு பதில், லேப்டாப்களை எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்.
மேலும், பாஜக தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில், இதுவரை கண்டிராத வளர்ச்சியை, ஜம்மு – காஷ்மீர் அடையும் இரு தெரிவித்த அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், நாங்கள் இந்தியாவுக்குச் செல்கிறோம் என்று கூறும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாகிஸ்தான் நினைப்பதாகவும், ஆனால் இந்தியா அவர்களை சொந்த மக்களாகவே கருதுகிறது என்றும், அவர்கள் தாராளமாக இந்தியாவுக்கு வரலாம் என்று கூறினார்.