LOADING

Type to search

இலங்கை அரசியல்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு – ஒன்றாவோம்.

Share

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இருக்கும் காலம். சிறி லங்காவின் தேர்தல் காலம்-உலகநாடுகளின் பார்வை அனைத்தும் சிறிலங்கா என்ற நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற காலம்.

ஈழத் தமிழர்கள், தொடர்ச்சியாக 75 வருடங்களாக, பல சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள் – தமிழ் மக்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன்.
ஆனால் போரில் நடந்த இனவழிப்பில் இழந்தததை விட இந்த 15 ஆண்டு காலத்தில் எமது அடையாளங்கள், நிலங்கள் பவுத்தமயம் ஆக்கலுக்கும், வனவளத்திற்கும், தொல்பொருள் திணைக்களத்திற்கும் தொடர்ச்சியாக இழந்து கொண்டு இருக்கின்றோம்.

இன்று அரசியல் கட்சிகளால் எமது சமுதாயம் பிரிக்கப்பட்டு எமது பலம் சிதைக்கப்பட்டு பல பிரிவுகளாக சிதறுண்டு இருக்கிறோம். எங்கள் இந்த பிரிவினையை, சிங்கள அரசு திட்டமிட்ட படி தமிழரை, தமிழ் தேசத்தை முற்றாக அழிக்கும் செயல்பாட்டில் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது.

சர்வதேச நாடுகள் இதுவரை காலமும் பார்வையாளராக கட்டம் கட்டமாக அறிக்கைகளை விட்டு கொண்டு நடந்த, நடந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பை தடுப்பதுக்கு தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்ததாகவேயில்லை.

தமது புவியில் நலம் சார் செயல்பாடுகளை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழல் தொடருமாக இருந்தால் நாம் முற்றாக அழிக்கப்பட்டு விடுவோம் என்ற ஆபத்தான கட்டத்தில், தாயகத்தில் இருந்து தமிழ் அரசியல் கல்வியாளர்கள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள், ஒன்று சேர்ந்து மீண்டும் தமிழ் மக்களின் இணைவை உருவாக்க பல திட்டமிடல்களுடன் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த காலப்பகுதியில் சிறிலங்காவுக்கான சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் எமக்குரியது அல்ல, சிறிலங்காவின் ஒற்றை ஆட்சி முறையை நாம் ஏற்றுக் கொண்டவர்களும் அல்ல, சிறிலங்கா யாப்பு எங்களுடையதும் அல்ல, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப் பட்ட யாப்பும் இல்லை.

சிங்களமும், பவுத்தமும்தான் – முதன்மை என்று காட்டப்படுகிறது. இதை அனைத்துலகத்திடம் ஒன்று பட்ட தமிழர் குரலாக இந்த சனாதிபதி தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும் என்று

தமிழ் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, தமிழருக்கான பொது பிரதிநிதியாக, தமிழரின் அடையாளமாக திரு அரியேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழருக்கான தேர்தல் அறிக்கை தமிழ் மக்களின் முழு பிரச்னைகளும் உள்வாங்கப்பட்டு வெளிவந்தது. அந்த அறிக்கையை நாம் முழுதாக வரவேற்கிறோம்.

“சங்கே முழங்கு சங்கே முழங்கு”
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
“பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு” என்று
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல் வரிகளை எழுதி வைத்தார்.

அதற்கு ஏற்றால் போல் தமிருக்கான தேர்தல் சின்னமாக சங்கு எமக்கு அமைந்து இருக்கிறது.
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு” என்ற சிந்தனை வரிகள் அடிப்படையில் எங்கள் குரல் சர்வதேசத்துக்கு ஓங்கி ஒலிக்கவேண்டிய காலம்
இது

இந்த காலத்தை சரியான வழியில் ஈழத் தமிழர்கள், சிறிலங்காவில் வாழும் தமிழ் பேசும் மக்கள், மலையகத்தில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் மலையகத் தமிழர்கள் எல்லோரும் இந்த சனாதிபதி தேர்தலை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், சர்வதேசமும் புரிந்து கொள்ள வேண்டும் -அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்கள் அவர்கள் வாழ்வும் வளமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை.

இந்த சூழலில் தமிழ் பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வரவேற்பத்தோடு இந்த தேர்தலை தமிழரின் குரலுக்கான தேர்தல் என்பதையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்வோம்.

திலீபன் பசியுடன் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று கூறி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தனது இன்னுயிரை தியாகம் ஆக்கிய காலம்.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு – ஒன்றாவோம்.

சங்குச் சின்னத்தை ஆதரித்து ஒன்றிணைவை பறைசாற்றுவோம்.

நன்றி
தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு