LOADING

Type to search

உலக அரசியல்

மிஸ் இந்தியா போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல் வெற்றி

Share

இந்தியாவுக்கு வெளியே மிக நீண்ட காலமாக நடத்தப்படும் உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில் துருவி படேல் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டிகள் நியூயார்க்கில் உள்ள இந்திய விழாக்குழு சார்பில் நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டி திருவிழா 31-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் கணினி தகவல் சிஸ்டம் மாணவி துருவி பட்டேல் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் நடைபெற்ற இந்த உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டியில் துருவி பட்டேல் வாகை சூடிய நிலையில், சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார். நெதர்லாந்தில் இருந்து வந்த மாளவிகா ஷர்மா 3-வது இடம் பிடித்தார். முதல் இடம் பிடித்த துருவி பட்டேல் “பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப்  தூதராக வேண்டும்” என தனது ஆசைகளை வெளிப்படுத்தினார். திருமணம் முடிந்தவர்கள் பிரிவில் டொபாகோவில் இருந்து வந்திருந்த சுஆன் மவுட்டெட் பட்டம் வென்றார். இங்கிலாந்தில் இருந்து சென்றிருந்த ஸ்னேகா நம்பியார் 2-வது இடமும், பவன்திப் கவுர் 3-வது இடத்தையும் பிடித்தார். பதின் பருவத்தினர் பிரிவில் குவாதலூப்பு என்ற கரிபியன் தீவில் இருந்து வந்த சியாரா சுரேத் பட்டம் வென்றார். நெதர்லாந்தில் இருந்து வந்த ஷ்ரேயா சிங் 2-வது இடமும், சுரிநாமில் இருந்து வந்திருந்த ஷ்ரதா தெட்ஜோ 3-வது இடமும் பெற்றனர்.