LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி முதல்-அமைச்சராக பதவியேற்றார் அதிஷி

Share

டில்லி முதல்-அமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-அமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்-அமைச்சராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் டில்லியின் புதிய முதல்-அமைச்சராக அதிஷி மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில துணை நிலை ஆளுனர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.