LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் அரசாங்கத்தில் 04 அமைச்சர்களின் கீழ் 15 அமைச்சு பொறுப்புக்கள்

Share

இலங்கையின் 76 வருட கால அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைத்த பலமான அடியும் தோல்வியும் இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டிரு க்கின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாய க்காவின் அரசாங்கத்தில் 04 அமைச்சர்களின் கீழ் 15 அமைச்சு பொறுப்புக்கள் பகிரப்பட்டு ஆட்சியை முன்னெடுக்க திட்டமிடப் பட்டிருக்கின்றது.

(24 )ஆம் திகதி செவ்வாய் ஹரினி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து பிரதமர் ஏற்கனவே 08 ஆம் திகதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுப்பார்.

பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் JVP யின் வெற்றிடமாக இருக்கின்ற பா.உ. பதவிக்கு லக்ஷ்மன் நிபுண ஆரச்சி நியமிக்கப்படுவார்.
அதன் பின்னர் ஜே.வி.பி. கட்சியின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட 4 பேருக்கிடையில் 15 முக்கியமான அமைச்சு பொறுப்புக்கள் பகிரப்படும்.

அதோடு இந்த பாராளுமன்றத்தின் கதை அதே போல் மூன்று மாதங்களுக்கான காப்பந்து அரசாங்கம் வரும் வாய்ப்பு இல்லை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

புதிய பாளுமன்றம் தெரிவாகும் வரையில் மேற்படி ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட 04 அமைச் சர்களைக் கொண்ட அமைச்சரவை ஆட்சி தொடரும்.

புதிய பாராளுமன்றம் தெரிவாகிய பின்னர் முழுமையான 30 பேர்களைக்கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்.

அதற்கடுத்ததாக சிம்மாசன பிசங்அகத்துடன் வைபவரீதியாக புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும்.

அதனோடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் ஆட்சிப்பயணம் தொடரும்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பொன்றும் வரையப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழித்துக்கட்டப்பட்டு பிரதமரை நாட்டின் தலைவராக கொண்ட வெஸ்ட்மின்ஸ்டர் முறையிலான இந்திய மாதிரி பாராளுமன்ற நிர்வாக முறை ஏற்படுத்தப்படும்.

அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பவர்கள் ஹரிணி அமரசூரிய, விஜித ஹேரத், சுனில் ஹந்துன் ஹெட்டி மற்றும் புதிதாக பதவிப்பிமாணம் செய்ய இருக்கின்ற லக்ஷ்மன் நிபுண ஆர்ச்சி ஆகியோர்களாவர்.

ஜனாதிபதியும் சில அமைச்சு பொறுப்புக்களை வைத்துக்கொள்வார்.

இலங்கையின் 76 வருட கால அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைத்த பலமான அடியும் தோள்வியும் இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டிரு க்கின்றது.