LOADING

Type to search

சினிமா

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட காணொளி வெளியானது!

Share

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் முதல் 4 நிமிட காட்சி வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

இந்நிலையில், ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் 4 நிமிட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.