LOADING

Type to search

உலக அரசியல்

அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் – புதின்

Share

அணு ஆயுதமற்ற நாடாக இருந்தாலும், அந்த நாடு அணு ஆயுத பலம் பொருந்திய நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தினால் அது இரு நாடுகளும் கூட்டாக நடத்திய தாக்குதலாகக் கொண்டு அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று தங்களின் அணு ஆயுதப் பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிக்கும் நேட்டோ நாடுகள், அந்த ஆயுதங்கள் கொண்டு தங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதித்தால் அதற்குப் பதிலடியாக அந்த நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த இந்த கொள்கை மாற்றம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.