பஞ்சாமிர்தம் சர்ச்சை.. இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு
Share
ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர் மோஜன் ஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.