LOADING

Type to search

சினிமா

‘காந்தாரா 2’ படத்தில் மோகன்லால்?

Share

நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பின்னணி குரல் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘காந்தாரா சேப்ட்டர் 1’ மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து பதிவேற்றங்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள கதாநாயகன் மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.