LOADING

Type to search

இலங்கை அரசியல்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்!

Share

பு.கஜிந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் 03-10-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாள் சூரிய சேவைபீடத்தில் வீற்றிருந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 05 நாளான 07.10.2025 அன்று பூந்தண்டிகை திருவிழாவும், 06.10.2024 அன்று கஜேந்திரசேவையும், 07.10.2024 அன்று வெண்ணைத் தாழி சேவையும், 11.10.2024 அன்று இரதோற்சவமும், 12.10.2024 அன்று தீர்த்தோற்வமும் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும்.

இதில் பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.