LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், என ஜனாதிபதி அனுராகுமரவிடம் நேரில் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

Share

ந.லோகதயாளன்.

ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், நீங்கள் போடும் ஊழல் வழக்கிலும் நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியதே சாண்று என ஜனாதிபதி அனுராகுமர திசநாயக்காவிடம் எம்.ஏ.சுமந்திரன் நேரில் தெரிவித்தார்.

ஜனாதபதி அனுராகுமர திசநாயக்காவை 02-10-2024 அன்றைய தினம் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல கோரிக்கைகளை முன் வைத்தார் இதன்போது
ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், நீங்கள் போடும் ஊழல் வழக்கிலும் நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியதே இதற்கு சாண்று பகிரும்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மதுபானசாலை அனுமதிப் பட்டியல் செவ்வாய்கிழமை வெளியிடுவதாக கூறப்பட்டபோதும் அது இதுவரை வெளிவராதமை உங்கள் அரசு மீதும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விடும் எனவே அதனை உடனே வெளியிட வேண்டும்.

அரசியல் அமைப்பு விடயத்தில் 2015 ஆம் ஆண்டு வரைந்ததை நிறைவேற்றுவதாக கூறிநீர்கள் அதனை மேலும் சீர் செய்து நிறைவேற்ற நடவடிக்கைவேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே
அதிகரிக்கும் புத்தவிகாரைகள்,
மயிலத்தைமடு பண்ணை விடயம்,
கல்முனைப் பிரச்சணைகளிற்கும் உரிய தீர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.

இவற்றிற்குப் பதிலளித்த ஜனாதிபதி மதுபானசாலை பட்டியல் முழுமை பெறாதமையே தாமத்த்திற்கு காரணம், கிழக்கின் 3 விடயங்களும் அறிந்துள்ளேன் நீதயான தீர்வு முன் வைக்கப்படும், அரசியலமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நடவடிக்கை இடம்பெறும் என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்