LOADING

Type to search

சினிமா

விமல் நடிக்கும் ‘சார்’ திரைப்படம் அக்.18ஆம் தேதி வெளியீடு

Share

போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படம் பின்னர் சார் என மாற்றப்பட்டது. படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கு முன்னரே கன்னிமாடம் என்னும் படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருந்தார். இது அவர் இயக்கும் 2வது படமாகும். கன்னிமாடம் படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், சார் திரைப்படம் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.