LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சர்வதேச உளநல தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

10.10.2024

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை (10) அன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய உளநல பிரிவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அன்று (10) காலை மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மன்னார் பஜார் வீதியூடாக மன்னார் மாவட்ட செயலகம் சென்று அங்கிருந்து பொது விளையாட்டு மைதான வீதியை சென்றடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சென்று நிறைவடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், உளநல பிரிவு வைத்திய அதிகாரி,மற்றும் வைத்தியர்கள் ,பணியாளர்கள்,தாதியர்கள்,சுகாதார பணியாளர்கள், சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் குறித்த ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகம் இடம் பெற்றது.