LOADING

Type to search

சினிமா

‘விடாமுயற்சி’ படத்தின் பின்னணி பணியை தொடங்கிய அஜித்

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முன்னோட்டம் கடந்த 28-ந் தேதி வெளியானது. முன்னோட்டத்தில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு…. என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் பின்னணி பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வருகிற 13ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பாடல், சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது.