10ம் ஆண்டு நினைவு அஞ்சலி | அமரர் கனகர் குமாரசாமி
Share
(முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளர்).
திதி 16 – 12 – 2024
திருநெல்வேலி பத்திரகாளி அம்மன்
கோவிலடியை சேர்ந்தவரும்
முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளரும்
பின்னர் கனடா பிரம்ரன் நகரினை
வதிவிடமாகவும் கொண்டிருந்தவருமான அமரர் கனகர் குமாரசாமி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு பத்து ஆனதென்ன
ஆறவில்லை எம்மனமே
அன்று பட்ட அவ் வலியோ
இன்றுவரை தொடர்வதென்ன
தேடி வைத்த உறவு இன்றும்
தேம்பி மனம் வாடுகையில்
கூடி ஒரு பொழுதேனும்
குடியிருந்து வாழ்வதற்கு
நாடி உமை வரும்போது
என் குடும்பம் என எமை அணைத்து
கோடி ஒரு புண்ணியமாய்
மீண்டும் அதை எமக்களிப்பீர்
இங்ஙனம்
மனைவி. மக்கள் மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகளும்