LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. சத்தியபாலதேவி சிற்றம்பலம்

Share

(யாழ்ப்பாணம், கொட்டடி)

யாழ்ப்பாணம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி யாழ்ப்பாணம், கனடா ஸ்காபரோ ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான திருமதி. சத்தியபாலதேவி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம்-இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம் கதிரவேலு (விசக்கடி வைத்தியர் மற்றும் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், சிறீமதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

சிவசக்தி, சிவகுமார் (கனடா), கதிரவேலு (இலண்டன்), சிவானி (இலண்டன்), சிவநாதன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலகிருஷ்ணன், கருணா, தட்சாயினி, சக்திவேல், தயாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்

தமிழினி, ஜோதினி, கார்த்திகாயினி, சாயீசன், அனுசன் (The Draft Room), அபிநயா, ஜேம்ஸ், அபிராமி, தீபோ, சயந்தன், கரிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், பிரணவன், மகேஸ், கிருத்திகா, யனுஸ், கனிஸ், அலிசா, ஆரியன், அர்ச்சுன், விஷ்ணு ஆகியோரின் ஆசைப் பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave Markham Ont L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ride Funeral Home இல் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிமுதல் 10:00 மணி வரையும், மறுநாள் 16-12-2024 திங்கட்கிழமை பகல் 12:30 தொடக்கம் 1:30 வரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதேநாள் பிற்பகல் 1:30 தொடக்கம் 3:30 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று Chapel Ride Funeral Home & Cremation (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0) ல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு

சிவகுமார் (மகன்) 416-889-3191
சிவநாதன் (மகன்) 44-7956-855982
கதிரவேலு (மகன்) 44-7960-352784
பாலா (மருமகன்) 416-727-6934