LOADING

Type to search

சினிமா

சூர்யா படத்தில் ‘லப்பர் பந்து’ நடிகை சுவாசிகா

Share

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. சமீபத்தில் திரிஷா இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்து படக்குழுவினர் பதாகை ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பதிவேற்றம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா ‘சூர்யா 45’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகர் இந்திரன்ஸ் இப்படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.