LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜாகிர் உசேன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

Share

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசேன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாகிர் உசேன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஜாகீர் பாய் சீக்கிரமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் அவர் நமக்கு கொடுத்த காலங்களுக்காகவும் அவருடைய கலையின் வடிவத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றதற்காகவும் நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.