அம்பேத்கர் அவமதிப்புக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – கார்கே அறிவிப்பு
Share
நாடாளுமன்ற நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அமித் ஷாவை நீக்க வேபண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம். அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவமதிப்பாக பேசிய விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ.க. விரும்புகிறது. அதனால் மற்ற விசயங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி விட்டனர். நான் நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தேன். இந்த விசயத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அம்பேத்கர் அவமதிப்புக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். அமைதியாக நடந்து கொண்டிருந்த அவையில் இடையூறு ஏற்பட்டது. அதற்கான வேலைகளை பா.ஜக. செய்தது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.