நடிகர் கோதண்டராமன் மரணம்
Share
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த நடிகர் கோதண்டராமன் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோதண்டராமன், சிகிச்சை பலனின்றி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். “கலகலப்பு” திரைப்படத்தில் கோதண்டராமன் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் வேலை பார்த்த்துள்ளார். மேலும், பகவதி, திருப்பதி, கிரீடம், சிங்கம், வேதாளம் படங்களில் நடித்துள்ளார். கோதண்டராமன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.