2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் – உதயநிதி ஸ்டாலின்
Share
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்-அமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. 2024 தேர்தலில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் முதலிடம். நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. 2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை; இந்தியாவுக்கான வெற்றி. 200 தொகுதிகளில் இல்லை, 200-க்கும் மேல் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.