விடுதலை 2 படம் 2 நாளில் 22 கோடி வசூல்?
Share
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். இதில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வசூலை அள்ளிக் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 2 திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.