LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு நகரில் இரு வெவ்வேறு விபத்துக்களில் 20 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழப்பு.

Share

வாகன உரிமையாளர் மற்றும் சாரதிகள் உட்பட 3 பேர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதிய மற்றும் கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய இரு வீதி விபத்து சம்பவங்களில் 20 வயது இளைஞர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த 21ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன இதில் கனரக வாகன உரிமையாளர் மற்றும் சாரதி இருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள வெள்ளக்குட்டி சந்தி பகுதியில் சம்பவதினமான சனிக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நகர்பகுதியை நோக்கி பிரயாணித்த கனரகவாகம் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மட்டு நாவக்கேணியைச் சேர்ந்த 46 வயதுடைய சி.சிவநேஸ்வரன் என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததையடுத்து கனரக சாரதியை கைதுசெய்தனர்.

அதேவேளை மாமாங்கம் கோவில் வீதியில் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீதியை செப்பனிட பயன்படுத்தும் (றொலர்) கனரக வாகனத்துடன் மோதியதையடுத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்

மாமாங்கம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரஞ்சித்து சவிஷ்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வீதியில் கனரக வாகனத்தை நிறுத்திவைத்திருந்த வாகன உரிமையாளர் மற்றும் சாரதி உட்பட இருவரை கைது செய்ததடன் வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.