LOADING

Type to search

இந்திய அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகை – சென்னையில் 8000 காவலர்கள் பாதுகாப்பு

Share

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று 8,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

     கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் காவலர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்காதவாறு கண்காணிக்கப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா, டிரோன் மூலம் கண்காணிக்கபடுகிறது. சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.