மறைந்த இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழாரம்
Share
ஷியாம் பெனகல் மறைவுக்கு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், ஷியாம் பெனகலை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நம் காலத்தின் மனிதாபிமான கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது படங்களின் மூலம், உண்மையான இந்தியாவை திரைக்கு கொண்டு வந்து, ஆழ்ந்த சமூக விஷயங்களைக் கையாண்டு சாதாரண மக்களை நேசிக்கச் செய்தவர் ஷியாம் பெனகல். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கலையை போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.