LOADING

Type to search

சினிமா

திரைத்துறையை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்?

Share

தனது நீண்ட நாள் காதலரைத் திருமணம் செய்த கீர்த்தி சுரேஷ், தற்போது திரைத்துறையை விட்டு விலகுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சில நாட்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனியை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடத்து முடிந்தது. இவர் திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கினார். மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் தாலியுடன் வெஸ்டர்ன் உடைகளில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வைரலானார். தற்போது இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையிலிருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய திரைப்படம் வெளியாகவுள்ளன. இந்நிலையில் இப்படங்களைத் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவ தொடங்கியுள்ளன. ஆனால் இந்த தகவலை இப்போது வரை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்யவில்லை. எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கொடுக்கவில்லை. மேலும் வதந்திகளுக்கும் தற்போது வரை கீர்த்தி சுரேஷ் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை.