LOADING

Type to search

சினிமா

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

Share

தமிழ் திரைத்துறையில் இசைமையப்பாளராக அறிமுகம் ஆன கங்கை அமரன் (77), கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள அவர், பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது கங்கை அமரன் புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.