LOADING

Type to search

ராசி பலன்

10.01.2025 வெள்ளி முதல் 16.01.2025 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

செல்வாக்கு உயரும் வாரம். வாடும் நிலை விலகி, வீடு, நிலமும் வாங்கக்கூடிய அற்புதமான காலம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். திடீர் மாற்றங்கள் நிகழும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். தாய்வழி தகராறு குறையும். கனவுகள் பலிதமாகும். கனிவான பேச்சு அவசியம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆலய தரிசனம் அமைதி தரும். இனம் புரியா சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் தனவரவு உண்டு. வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. ஆண்களின் அதிகாரம் உயரும். பெண்களால் பெருமை சேரும். வறுமையின் வாட்டம் குறையும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. பயணங்களால் பணம் கரையும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். செயல்பாட்டில் கவனம் தேவை. கூட்டுத்தொழில் லாபம் தேவை. ஆரோக்கியம் கூடும். சவாலான விஷயங்களை சமாளித்து சாதனை நிகழ்த்தும் காலம். கர்ம வினைகள் அகலும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர். குதூகலம் கூடும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: இஷ்ட தெய்வம் அதிர்ஷ்ட எண்: 8, 4, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: செந்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, W

ரிஷபம்:

இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமையும் வாரம். புதிய வாய்ப்புக்கள் கூடும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார லாபம் கூடும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஏற்றமதி தொழில் லாபம் தரும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்களின் அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சி பலன் தரும். அரசு வழியில் ஆதாயம் பெருகும். பொது விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பித்ருக்கள் சாபம் நீங்கும். பழையக்கடன் வசூலாகும். மனிதநேயம் மிகுதியாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பாவங்கள் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொழில் போட்டி மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். காதலர்கள் ஒற்றுமை கூடும். உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்கும். மங்கள செய்தியால் மனம் மகிழும். வங்கி சேமிப்பு உயரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். புது முயற்சி தள்ளி வைக்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உழைப்பால் மதிப்பும், உங்களால் சிறப்பும் சேரும் காலம். மனைவியால் மதிப்பு உயரும். மன அமைதி கிட்டும். மந்தமான நிலை மாறும். அற்புதமான தருணம். பொருளாதாரம் உயரும். சிறப்புக்கள் சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாகர் அதிர்ஷ்ட எண்: 5, 2, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, O

மிதுனம்:

கௌரவ வாய்ப்பு கிடைக்கும் வாரம். கைமேல் காசு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. இனம்புரியா சந்தோஷம் குடிக்கொள்ளும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். விபரீத எண்ணம் விலகும். பேச்சில் நிதானம் தேவை. புதிய நட்பு உருவாகும். இனிப்பான செய்திகள் வரும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர். பயணம் வெற்றி தரும். உதவும் குணம் உண்டு. சாதக சூழ்நிலை உருவாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். உறவினர் வருகை உண்டு. வணிகத்தொழில் வளம் கூடும். பழைய பாக்கி வசூலாகும். ஆபரணச் சேர்க்கையுண்டு. ஐஸ்வர்யம் கிடைக்கும். ஊக்கத்தோடு செயல்பட்டு உயர்வுகளை சந்திக்கும் உன்னதமான காலம். விரும்பியது நிறைவேறும். உற்சாகம் களை கட்டும். வேலைப்பளு அதிகரிக்கும். புது சிந்தனை உருவாகும். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்புக்; கிட்டும். கலைத்தொழில் திருப்பம் ஏற்படும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. விடாமுயற்சி அவசியம். சுபச்செலவு கூடும். கமிஷன் தொழில் லாபம் தரும். தொழில் லாபம் பெருகும். போட்டிகள் கடுமையாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். நிர்வாக அலைச்சல் கூடும். அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். துன்பம் விலகி ஓடும். இழந்த செல்வம், இழந்த கௌரவம் திரும்பக் கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மஹாலஷ்மி அதிர்ஷ்ட எண்: 2, 4, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, W

கடகம்:

சாதகமான சூழ்நிலை உருவாகும். அணிகலன் சேர்க்கையுண்டு. ஆடம்பர எண்ணம் அலைமோதும். பதவி உயர்வு கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும். கலைத்தொழில் லாபம் தரும். கடன் வாங்க நேரிடும். கண்நோய் வந்து போகும். கவலைகள் விலகும். கால்நடைகளால் லாபம் உண்டு. மனைவியால் மரியாதை உயரும். பகைவர் பணிந்து நிற்பர். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உறவுகளால் மதிப்பு கூடும். உத்தியோக உயர்வு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். வியாபார அபிவிருத்தி ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். சுபிட்ஷங்கள் பெருகும். பெண்களால் பெருமை சேரும். பிராணிகளால் தொல்லை உண்டு. பல் வலி வந்து போகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். மாற்றங்கள் கிடைக்கும். மகத்தான காலம். நினைத்ததெல்லாம் நடக்கும் நேர்த்தியான காலம். வீண் வம்பு விலகும். வயிற்று உபாதைகள் தோன்றி மறையும். விரக்திகள் மறையும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை. பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி வீடு தேடி வரும். விவேகம் கைகொடுக்கும். செல்வச் செழிப்பு உயரும். காரியம் கைக்கூடும். தெளிவான முடிவுகள் உதயமாகும். நெருக்கடிகள் குறையும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பர பொருள் சேரும். உடல்சோர்வு ஏற்படும். குடும்ப மேன்மை உண்டு. பணத்தட்டுப்பாடு நீங்கும். மனக்கட்டுப்பாடு அவசியம்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன் அதிர்ஷ்ட எண்: 4, 2, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, O

சிம்மம்:

எதிரிகள் உதிரியாகும் வாரம். பிரார்த்தனை நிறைவேறும். பிரபல்யம் ஆகும் வாய்ப்பு வரும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. விளையாட்டுத்துறையில் வெகுமதி கிடைக்கும். உத்தியோக இடமாற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்ப குழப்பம் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. பெற்றோர் வாழ்த்து உண்டு. முற்போக்கு சிந்தனை வரும். பங்குத்தொழில் பணம் தரும். புதிய எண்ணம் உருவாகும்;. வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். செயல் விவேகம் கூடும். காயத்ரி மந்திரத்தால் கஷ்டங்கள் விலகும். பட்டம் பதவி தேடி வரும். சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். கனிவான பேச்சு அவசியம். பணிவான செயல்களால் காரியத்தால் வெற்றி காணும் காலம். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. வினோதமான எண்ணங்கள் விலகும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். பெற்றோர் பாராட்டு கிட்டும். கட்டிடத்தொழில் கவனம் தேவை. புதிய முதலீடு உண்டாகும். கற்பனை வளம் பெருகும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். தொல்லை தந்தவர் விலகுவர். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். போட்டிகள் அதிகரிக்கும். மங்களச் செய்தியால் மனம் மகிழும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஜம்புகேஸ்வர்; அதிர்ஷ்ட எண்: 3, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, K

கன்னி:

இல்லம் வளர்ச்சி அடையும் வாரம். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. வினோதமான எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய முயற்சிகள் பலன் தரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. கன்னிப் பெண்களுக்கு சுபச்செய்தி வரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். மனச் சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. பஞ்சாயத்து மூலம் பழையக் கடன் தீர்வுக்கு வரும். வாகனத்தில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளி வட்டாரப் பழக்கம் அதிகமாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நட்டமில்லாமல் நடக்கும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். தொலைத்தூர தொடர்பு லாபம் தரும். செல்வாக்கு உயரும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். கடன் சுமை குறையும். கௌரவம் உயரும். கனவுகள் பலிதமாகும். தாய்வழி தகராறுகள் குறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். எண்ணங்கள் பலிதமாகும். கலகலப்புக் குறையும். உறவினர் வருகையால் செலவு ஏற்படும். சுபிட்ஷங்கள் பெருகும். ஒரு சிலருக்கு கவுரப் பதவி தேடி வரும். அரசியல்வாதிகள் அனுகூலம் பெறுவார்கள். பண நடமாட்டம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 7அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, E

துலாம்:

சொந்தங்களால் மனநிறைவு கிட்டும் வாரம். எதிர்ப்புக்கள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். நட்பு வட்டம் விரிவடையும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். வெளி தொடர்பு ஆதாயம் தரும். சேமிப்பு வளரும். வியாபாரம் சிறந்து விளங்கும். நீண்ட நாளைய நோய் விலகும். ஆடம்பர செலவு அதிகரிக்கும். செய்த்தொழில் சிறப்படையும். திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். அரசியல்வாதிகள் அனுகூலம் பெறுவார்கள். தொட்டது துலங்கி சட்டென உயரக்கூடிய சாதகமான காலம். பேச்சில் பணிவு தேவை. தனவரவுகள் தடைப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். ஆடம்பர செலவு அதிகரிக்கும். மாற்று இன நட்பு பெருகும். வங்கி சேமிப்பு உயரும். தொல்லை தந்தவர் விலகிடுவர். திடீர் செலவு ஏற்படும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். மனைவியால் மதிப்பு உயரும். குடும்ப மேன்மைகள் உண்டாகும். மனோபயம் நீங்கும். மருத்துவச் செலவு ஏற்படும். உறவினர்களால் தொல்லையுண்டு. கூட்டுத்தொழிலில் லாபம் ஏற்படும். காதலால் மகிழ்ச்சி உண்டு. நோய் நொடிகள் அகலும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனம் தேவை. நிதி நிலைமை
சீராகும். உதவிகள் கிடைக்கும். கலை ஈடுபாடுகள் அதிகரிக்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பிணிகள் நீங்கும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பூமாதேவி அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, L

விருச்சிகம்:

பெத்தவங்களோட ஆசி கிட்டும் வாரம். இல்லத்தில் அமைதி கூடும். கற்பனை ஆற்றல் பெருகும். கடன் பிரச்சனை குறையும். காரிய தாமதம் ஏற்படும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். தந்தை நலம் கவனம் தேவை. அனுகூலமான போக்கு நிலவி வரும். ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும். குடும்ப சந்தோஷம் கூடும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். மனைவியால் மதிப்பு உயரும். பழைய பகை மாறும். வாழ்த்துக்கள் வந்து சேரும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். திட்டமிட்ட செயல் வெற்றி தரும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். ஆபரணப் பொருள் களவுப்போகும். அத்தியாவசிய செலவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. ஆனந்தம் பெருகும். வாகன மாற்றம் உண்டு. வியாபாரம் விருத்தியாகும். பக்கத்து வீட்டு பகை மாறும். புதிய நட்பு உருவாகும். மெத்தனப் போக்கு மாறும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். சுபச்செய்தி வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். தந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு. சுயத்தொழில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல் வலி தோன்றி மறையும். பூர்வீகச் சொத்துக் கிடைக்கும். உணவுத்தொழில் உயர்வு பெறும். இனிப்பான செய்திகள் வரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். பெரிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் கிடைக்கும். குடும்ப பாசம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கபாலீஸ்வரர்; அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Z

தனுசு:

ஏற்றங்கள் அதிகரிக்கும் வாரம். உடல்வலி தோன்றி மறையும். விருப்பமான தொழில் அமையும். பூர்வீக சொத்து கிடைக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச்செலவு ஏற்படும். செயலில் துணிவு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். இனிப்பான செய்திகள் வரும். உணவுத்தொழில் உயர்வு பெறும். பிரயாணம் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புக்கள் கூடும். புதிய நட்புக்கள் உருவாகும். மனைவி உடல்நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டு. இனிய தகவல் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டு பயணம் ஏற்படும். மாற்று இனத்தவர் நட்பு கிட்டும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். கன்னிப்பெண்களுக்கு சுபச்செய்தி வரும். ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பழையக்கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். ஏற்றமும் மாற்றமும் அதிகரிக்கும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். தாய்வழி உறவில் சற்று கவனம் தேவை. கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். கௌரவம் உயரும். வறுமைகள் ஒழியும். தன லாபம் கூடும். தகுதிகள் உயரும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். தங்க நகைகள் சேரும். சகோதரியால் அனுகூலம் உண்டு. திருமண வாய்ப்பு கூடி வரும். ஜீவ ராசிகளுக்கு உணவு அளிப்பதால் யோக பலன் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: தனதேவதை அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, S

மகரம்:

இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். உறவினர்கள் வருகை ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சொத்துச் சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். தாராளமான தனவரவுகள் உண்டு. மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை சீராகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பால்ய நண்பரை சந்திக்க நேரிடும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். முன்கோபம் தவிர்க்கவும். எதிரிகளையும் நண்பர்களாக்கி ஏற்றங்கள் காணக்கூடிய எதார்த்தமான காலம். லஷ்மி கடாட்ஷம் உண்டாகும். ஆடை, அணிகலன் சேரும். குதூகலமான மனநிலை காணப்படும். பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மறையும். தாய்வழி உறவினர் கவனம் தேவை. தோற்றப்பொலிவு கூடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. எதிரிகள் ஏமாற்றம் அடைவர். ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன், மனைவி கௌரவம் உயரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. கடன் தொல்லை தீரும். கட்டிடத்தொழில் கவனம் தேவை. மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். வியாபாரம் லாபம் தரும். உயர்கல்வி ஆர்வம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மங்களச் செய்திகள் வரும். திருப்புமுனைகளை சந்திக்கக்கூடிய காலம். திருமண வாய்ப்பு கூடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சண்முகப்பெருமாள் அதிர்ஷ்ட எண்: 3, 4, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, J

கும்பம்:

எடுத்த காரியம் வெற்றி பெறும். தொலைநோக்கு சிந்தனையால் விலைமதிக்க முடியாத வெகுமானம் கிடைக்கக் கூடிய அற்புதமான காலம். நிதி நிறுவனம் லாபம் தரும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. மாணவர் மதிப்பு உயரும். இனிய சம்பவம் அமையும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். குதூகலம் அதிகரிக்கும். சகோதரியால் லாபம் உண்டு. மனைவியால் மகிழ்ச்சி உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். வேண்டாத நட்பு விலகும். விரக்தி நிலை மாறும். முடிவுகள் சாதகமாகும். முயற்சிகள் தாமதமாகும். வாகன யோகம் உண்டு. வகையான செல்வம் சேரும் காலம். நல்லோர்கள் வாழ்த்து கிடைக்கும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். மாலை நேரத்தில் பெண்களுக்கு கவனம் தேவை. பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். சந்தோஷமான நிகழ்வுகளும் சாதகமான சூழ்நிலை உள்ள அற்புதமான காலம். இக்கட்டான சூழ்நிலை அகலும். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் கூடும். உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெற்றி பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை தரும். நல்ல செய்திகள் வரும். ஆறுதலான சூழ்நிலை அமையும். உற்சாகம் களை கட்டும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். கஷ்ட காலம் விலகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்ச பூதம் அதிர்ஷ்ட எண்: 5, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, D

மீனம்:

சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் வாரம். நண்பர்களின் பேச்சு ஆறுதல் தரும். நீண்ட நாட்களாக நினைத்து வைத்து இருந்த காரியம் இன்று நிறைவேறும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை தேவை. பெண்களால் பிரச்சனை ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். மனசஞ்சலம் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். வேண்டாத விஷயங்களை தவிர்க்கவும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகை உற்சாகம் கொடுக்கும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. சகோதர வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். விவேகமான செயல்களால் வெற்றி கிட்டும். திருமண தடைகள் விலகும். கணவன், மனைவி உறவு வலுப்படும். சிறப்போடும், பொறுப்போடும் செயல்படுவீர். திருப்பு முனைகளை சந்திக்கும் காலமாக அமையும். அயல்நாட்டுப் பிரயாணம் கூடி வரும். உறவினர் பகை மாறும். வேலைவாய்ப்பு கிட்டும். எதிர்ப்புக்கள் விலகும். உயர்ந்த நிலை அடைவீர். பொருளாதார நிலை சீராக இருக்கும். கோபம் தவிர்த்து ஆன்மீகத்தில் ஆர்வம் செலுத்த வேண்டும். புதிய நிலம், வீடு வாங்க நேரிடும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும். எதிர்ப்புக்கள் குறையும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றிக் கிட்டும். காதலர்கள் தம்பதியாவார்கள். செல்வாக்கு மேம்படும். தர்ம சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான் அதிர்ஷ்ட எண்: 6, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, X