LOADING

Type to search

இலங்கை அரசியல்

நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலய நிதி அனுசரணையில், ஆனைக்கோட்டை பிரதேசத்தில் 31மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பெற்றன

Share

ஜனவரி மாதம் 7ம் திகதி செவ்வாய்கிழமையன்று நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தின் பீடசீடர்களின் நிதி அனுசரணையில், ஆனைக்கோட்டை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 31மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பெற்றன. விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆனைக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை கரைபிரான் ஆதிவிநாயகர் ஆலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திரு.நவரஞ்சனின் தலைமையில் ஆலய பிரதமகுரு முன்னிலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அமெரிக்கா நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தின் பீடசீடர்களின் நிதி அனுசரணையில், வன்னிப் பட்டறை உதவிக்கரத்தின் சைதன்ய சேவை ஊடாக இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.