LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் விவசாய நிலங்களில் கட்டிடங்கள் – அரச அதிகாரிகள் அசமந்தம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

Share

(08-01-2025)

வவுனியாவில் ஏ9 வீதியை அண்டிய பல வயல் நிலங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கில் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றன.

வவுனியா தாண்டிக்குளம் நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் மண்ணிட்டு நிரப்பி மேட்டு நிலங்களாக காட்டி அதில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விவசாயம் செய்வதற்கான நிலங்கள் இல்லாமல் போகின்ற நிலைமை வவுனியா மாவட்டத்தில் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுவது டன் சம்பந்தப்பட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் அவர்களும் சில விடயங்களில் கண்டும் காணாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.