LOADING

Type to search

சினிமா

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

Share

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சூர்யா 44 படத்தின் தலைப்பு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ரெட்ரோ’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வெளியீடு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.