அனிருத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அறிவுரை
Share
அனிருத் கிளாசிக்கல் இசையை இன்னும் அதிகமாக கற்றுக்கொண்டு அதில் பாடல்களை உருவாக்க வேண்டும் என காதாலிக்க நேரமில்லை முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசயமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, நித்யா மெனன் இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரகுமான், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மேடையில் பேசியதாவது, “அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். முன்பு 10 இசையமைப்பாளர்கள் என்றால் இன்று 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். பெரிய படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுப்பது சாதரண விஷயம் அல்ல. திறமையில்லாமல் இது சாத்தியமில்லை. அனிருத்துக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டும் கூற விரும்புகிறேன். நீங்கள் கிளாசிக்கல் இசையை இன்னும் அதிகமாகக் கற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தியும் பாடல்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்யும்போது, நீண்ட காலத்திற்கு இருக்கலாம். நீங்கள் அதைச் செய்யும்போது இளம் தலைமுறைக்கு சென்று சேரும்”. இவ்வாறு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.