LOADING

Type to search

உலக அரசியல்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 515 அதிர்வுகள் பதிர்வு

Share

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் காயமடைந்துள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 515 அதிர்வுகள் பதிவானதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சீன மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 அதிர்வுகள் 3.0 ரிக்டர் அளவுக்கு கீழும், 27 அதிர்வுகள் 3.0 ரிக்டர் அளவிலும், 24 அதிர்வுகள் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவிலும், 3 அதிர்வுகள் 4.0 முதல் 4.9 வரையிலான ரிக்டர் அளவிலும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.