LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

Share

உக்ரைன், ரஷியா இடையே 1,050வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 படுகாயமடைந்துள்ளனர்.